குடிசைக்கு தீ வைத்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டி வடக்கு தெருவில் பெனடிக்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெனடிக் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோசப்(22), கவிபாரதி(21) ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன்விரதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த ஜோசப் மற்றும் கவிபாரதி ஆகிய இருவரும் இணைந்து பெனடிக்கின் குடிசைக்கு தீ வைத்துள்ளனர். அப்போது உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி பெனடிக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பெனடிக் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து ஜோசப், கவிராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.