Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. காட்டில் சுற்றி திரிந்த வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

முயல் வேட்டையாட முயன்ற மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள குரும்பனூர் தெற்கு பீட்டில் கருமாரியம்மன் கோவில் சரகத்தில் சிலர் முயலை வேட்டையாடுவதாக சென்னம்பட்டி வனச்சரவு அலுவலர் செங்கோட்டையனுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது மூன்று பேர் முயலை வேட்டையாடி கொண்டிருந்தனர்.

அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவுமணி(26), ஜான்பால்(25), பரத்(24) என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வனத்துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Categories

Tech |