கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கார் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கார் திம்பம் மலைப்பாதையின் 19-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பயந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.