Categories
உலக செய்திகள்

மொத்தம் 22,000 பேர்கள்…. காவல்துறையினருக்கு தண்ணி காட்டிய சம்பவம்…. பகிர் தகவலை வெளியிட்ட பிரபல பத்திரிக்கை….!!

பிரிட்டானியா நாட்டில் கொலை, பலாத்கார வழக்குகளில் சிக்கியுள்ள 22,000 பேர்கள் இன்னமும் காவல்துறையினரிடம் சிக்காமல் தண்ணிக்காட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

பிரித்தானியா நாடு முழுவதும் கொலை, பலாத்கார வழக்குகளில் சிக்கியுள்ள 22,000 பேர்கள் இன்னமும் காவல்துறையினரிடம் சிக்காமல் தண்ணிக்காட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பலாத்கார வழக்குகளில் சிக்கியவர்கள், கொலை தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் எனவும் கூறப்படுகின்றனர். இது மட்டுமின்றி, பலர் நீதிமன்றத்தில் பதிவான முகவரிகளில் பல வருடங்களாக வெளிப்படையாகவே குடியிருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், காவல்துறையினர் தரப்பு  குற்றவாளிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவே தனியார் பத்திரிகை ஒன்று முன்னெடுத்த விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியதாவது, “நமது நீதி அமைப்பு எவ்வளவு சீர்குலைந்துள்ளது என்பதை இந்த விவகாரம் அம்பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கைது செய்ய தண்டனை பிறப்பித்தும் 22,345 பேர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று தனியார் பத்திரிகை முன்னெடுத்த விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது மட்டுமின்றி, சிலருக்கு 1980களில் கைதாணை பிறப்பித்துள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து  காவல்துறையினருக்கு தண்ணிக்காட்டியுள்ளவர்களில் சுமார் 2,000 பேர்கள் பலாத்காரம், வன்முறை, படுகொலை  போன்ற குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது. மேலும், பலாத்கார குற்றவாளிகள் 400 பேர்கள் எனவும், அவற்றில் 11 பேர்கள் கொலை வழக்கில் சிக்கியவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பில் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவே காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |