Categories
உலக செய்திகள்

இனி தமிழிலும் ஹச் பேருரை…. சவூதி அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. !!!

இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. ஒரு இஸ்லாமியர் தன் வாழ்வில் ஒரு முறையாவது ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் மக்காவிற்கு யாத்திரை வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகள் குழந்தை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது இதனால் இந்த யாத்திரை நடைபெறவில்லை. தற்போது தலைவர்கள் அறிவிக்கப்பட்டு வந்ததால் இந்த ஆண்டு வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூலை 7 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து பரந்த மைதானத்தில் லட்சக்கணக்கான யாத்திருக்கர்கள் முன்னிலையில் துல்ஹஜ் பிறை உதிக்கும் நாளில் ஒரு பேருரை நிகழ்த்தப்படும், அதன் பெயர் தான் அரஃபா உரை. அரபுமொழியில் தலைமை இமாம் எனப்படும் மதகுரு நிகழ்த்தபடும். இந்த உரை ஆங்கிலம், பிரஞ்சு, மாலாய், உருது, பார்சி, ரஷ்யன், சைனீஸ், துர்கிஷ், ஹவுஸசா, வங்காள ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்படும். இந்த ஆண்டு முதல் கூடுதலாக தமிழ், ஸ்பானிஷ், சுவாகிலி மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் மொழி பெயர்த்து ஒளிபரப்ப இருப்பதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |