Categories
உலக செய்திகள்

ரஷ்ய தலைநகரில் பயங்கர தீ விபத்து…. பதற வைக்கும் வீடியோ வைரல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பிரபல நாட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் 66 தளங்களைக் கொண்ட ‌மிகப்பெரிய மூலதன கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடம் கடந்த வருடம் தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வெளியாகவில்லை. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு உக்கிரைனுக்கும் இடையே ஏற்கனவே போர் நடந்து வருவதால் உலக அளவில் உள்ள பல நாடுகளில் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் ரஷ்யா கிழக்கு உக்ரைனை  முழுமையாக கைப்பற்றிய பிறகு தான் போரை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்த சூழ்நிலையில் ரஷ்யாவில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |