நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக சிலிண்டர் மானியம் ஒரு சிலருக்கு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது நடப்பு நிதி ஆண்டு முதல் சமையல் சிலிண்டருக்கான 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு சில விதிமுறைகள் உள்ளது.அதாவது உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மட்டுமே மத்திய அரசு அறிவித்துள்ள மானியத்தை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சிலிண்டர் மானியம் பெறுவதற்கு ஆதார் கார்டு வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதனைப் போலவே வங்கி கணக்கை சிலிண்டர் கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும். உங்களது சிலிண்டர் நிறுவனத்தின் இணையதளம் மூலமாக இதனை எளிமையாக செய்து முடித்து விடலாம்.அல்லது எஸ் எம் எஸ் மூலமாகவும் சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து சிலிண்டர் விநியோகஸ்தருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி ஆதார இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மொபைல் போன் மூலமாக இணைப்பதற்கு 18000-2333-555 என்ற நம்பருக்கு கால் செய்து உங்களுடைய ஆதார் மற்றும் சிலிண்டர் விவரங்களை வழங்கி இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.