Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை…. இனி யாரும் இப்படி பண்ணாதீங்க…. வெளியான அதிரடி அறிக்கை….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தேமுதிக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன .ஏற்கனவே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தும் கேப்டன் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளை தேமுதிக வன்மையாக கண்டிக்கின்றது. இது போன்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனைவருக்கும் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுவது சகஜம்தான். விஜயகாந்த் உடல்நிலை குறித்து தலைமை கழகம் வெளியிடும் அறிக்கையை உண்மையானது இறுதியானது என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |