சென்னையில் கடந்த 23-ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 23-ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் எனவும் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எதையும் நிறைவேற்றக்கூடாது கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை நிறைவேற்றாமல் கட்சியின் அவை தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக மீண்டும் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.
அதாவது பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை நிறைவேற்றாமல் தமிழ் மகன் உசேன் அவை தலைவராக மட்டும் அறிவிக்கப்பட்டது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றதாகும். எனவே நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி, சி.வி. சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். அதுமட்டுமின்றி தமிழ் மகன் உசேனை அவை தலைவராக தேர்ந்தெடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ் மகன் உசேனை நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவை தலைவராக தேர்ந்தெடுத்தது கண்டிக்கத்தக்க செயலாகும் என்று கூறினார். அப்போது இ.பி.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பன்னீர்செல்வத்தின் நலனுக்காக மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறினார். இதற்கு ஓ.பி.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ் மகன் உசேனை இணை ஒரு இணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி அவை தலைவராக தேர்ந்தெடுத்தது தவறு என்றும், எடப்பாடி பழனிச்சாமியும் ,ஜெயக்குமாரும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
இதற்கு நீதிபதிகள் 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியது கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் வரை தான் செல்லும் என்றார். அதன் பிறகு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறினார். அதன் பின் வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் நீதிபதியின் இந்த உத்தரவினால் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு எந்த தடையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.