சென்னையில் அமைந்துள்ள மேம்பட்ட கணிணி மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Project Associate – 50 பணியிடங்கள்.
Project Engineer – 400 பணியிடங்கள்.
Project Manager/ Program Manager/ Program Delivery Manager/ Knowledge Partner – 50 பணியிடங்கள்.
Senior Project Engineer/ Module Lead/ Project Lead – 150 பணியிடங்கள்.
மொத்தமாக 650 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Project Associate பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Engineer பணிக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Manager/ Program Manager/ Program Delivery Manager/ Knowledge Partner பணிக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Senior Project Engineer/ Module Lead/ Project Lead பணிக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech / M.E / M.Tech / Post Graduation Degree / Ph.D ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
அனுபவம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Written Exam & Interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம் :
Project Associate பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.3,60,000/- முதல் அதிகபட்சம் ரூ.5,04,000/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.
Project Engineer பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.4,49,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,11,000/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.
Project Manager/ Programme Manager/ Program Delivery Manager/ Knowledge Partner பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.12,63,000/- முதல் அதிகபட்சம் ரூ.22,90,000/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.
Senior Project Engineer/ Module Lead/ Project Lead பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.8,49,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,00,000/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.07.2022
IMPORTANT LINKS