இரண்டு தொழிலாளர்களை தாக்கிய புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோபால்சாமி பேட்டையை சேர்ந்த கவியப்பா என்பவரை புலி ஒன்று தாக்கியதில் அவரின் வலது கண் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து புலியிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அவரின் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அன்று மாலையே தொழிலாளி ராஜேஷ் என்பவரையும் அந்த புலி தாக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்ததையடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு மைசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இதனால் பொதுமக்கள் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து வனத்துறையினர் மூன்று கும்கி யானைகளுடன் புலியை தேடும் பணியில் நேற்று ஈடுபட்ட பொழுது, புலி விவசாயம் தினத்தில் பதுங்கி இருந்தது. கால்நடை டாக்டர் வெங்கடேஷ் புலி மீது மயக்க ஊசி செலுத்தினார்.
சிறிது தூரம் புலி ஓடி மயங்கி விழுந்ததை தொடர்ந்து வனத்துறையினர் ராட்சத வலைக்குள் புலியை அடைத்து கொட்டும் மழையில் தூக்கிச் சென்று கூண்டில் அடைத்தனர். புலிக்கு மைசூர் வன உயிரின மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி கர்நாடகா வனத்துறையின கூறியுள்ளதாவது, ஆண் புலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதால் வேட்டையாடும் திறனை இழந்து மாடு, மனிதர்களை தாக்கி வருகின்றது. இதனால் அதை பிடித்து மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என அவர் கூறியுள்ளார்.