தலிபான்கள் சென்ற மினி பஸ் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தலிபான்கள் சென்ற மினி பஸ்ஸில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் தலிபான் 207 அல் பரூக் கார்ப்ஸ் பிரிவை சேர்ந்த பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்ந நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.