தஞ்சையிலிருந்து சென்னைக்கு அரவைக்காக 2000 டன் நெற்கள் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெற்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்படுகின்றது. பின் அரவை செய்யப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்களில் இருந்து 2000 டன் நெல் 240 லாரிகளில் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அரவைக்காக ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.