இளம்பெண்ணிடம் திருடிய குற்றத்திற்காக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தர்ஷினி(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து தர்ஷினி குமாரபாளையம் செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் பேருந்தில் அமர்ந்து இருந்த தர்ஷினி தனது கைப்பையில் வைத்திருந்த செல்போன், மற்றும் 8000 ரூபாய் பணம் காணாமல் போனதை கண்ட அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தர்ஷினி மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக பர்தா அணிந்து நின்று கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாரியம்மாள்(36) மற்றும் மகாலட்சுமி(34) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் தர்ஷினியிடம் செல்போன் மற்றும் பணத்தை திருடியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிந்த மேட்டூர் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.