மனைவியின் கரு கலைந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் அஜித்குமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேக்கரியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித்குமார் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தீபா(20) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தீபா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால் வயிற்றில் இருந்த கரு திடீரென கலைந்ததால் மன உளைச்சலில் இருந்து அஜித்குமார் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜித்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அஜித்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.