Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

பிளாஸ்டிக் குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பிளாஸ்டிக் கவர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பிளாஸ்டிக் கவர் குனூனில் திடீரென தீ பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |