பிரபல நடிகரின் மீது பாலியல் குற்றம் சுமத்திய நடிகை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஜய் பாபு மீது கடந்த ஏப்ரல் மாதம் இளம் நடிகை ஒருவர் கொச்சி காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடிகர் விஜய் பாபுவை நேரில் ஆஜராகுமாறு கூறினர். ஆனால் விஜய் பாபு நேரில் ஆஜராகாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் கேரள நீதிமன்றத்தில் விஜய் பாபுவுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமின் வழங்கப்பட்ட பிறகு அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தார்.
இந்நிலையில் பாலியல் புகார் கொடுத்திருந்த நடிகையிடம் விஜய் பாபு ஒரு கோடி ரூபாய் பணம் தருகிறேன் என்று கூறியதாகவும், புகாரை வாபஸ் வாங்குமாறு கூறினார் என்றும் நடிகை மீண்டும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் காரணமாக விஜய் பாபுவின் ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் நடிகை மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் விஜய் பாபு வெளியில் இருந்தால் சாட்சியங்களை அழித்துவிடுவார் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.