உங்களை திருமணம் செய்வதற்கான தகுதி பற்றி ரசிகர் கேள்வி எழுப்பியதற்கு அமலாபால் பதிலளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மலையாள திரையுலகம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி தமிழில் விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார். அதன்பின் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான சிறிது காலத்திலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தார். திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்த அமலாபால் விவாகரத்துக்குப் பின் மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் அமலாபால் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பொழுது ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும் என கேள்விகேட்ட பொழுது அமலா பால் கூறியுள்ளதாவது, உண்மைய சொல்லனும்னா நான் இன்னும் அதை கண்டுபிடிக்கவில்லை. தற்பொழுது தான் சுய புரிதலுக்கான பயணத்தில் இருக்கின்றேன். நான் கண்டுபிடித்த பின் உங்களுக்கு கண்டிப்பாக கூறுகிறேன் என கூறியுள்ளார்.