மாதவன் இயக்கி நடித்த திரைப்படமான ராக்கெட்ரி திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் மாதவன். இவர் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் இந்தியாவின் சொந்த ஏவுகணையை விண்ணில் ஏவும் கனவை கொண்டிருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் சந்தித்த அவரின் வாழ்க்கை மற்றும் விளைவை உணர்வு பூர்வமாக கொடுத்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி. குறைந்த செலவில் ராக்கெட் என்ஜினை தயாரிக்க வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரோவிற்கு சென்று பணியாற்ற முடிவு செய்கின்றார். பின் அங்கு சென்று இஞ்சினை தயாரிக்க அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கே தெரியாமல் கற்றுக்கொண்டு இந்தியா திரும்புகின்றார்.
இதை அடுத்து பல வருடங்களுக்கு பிறகு 60 லட்சம் செலவில் லீகுய்ட் பியூயல் இன்ஜினை கண்டுபிடித்தார். வெளிநாடுகள் பல நூறு கோடிகளை செலவழித்து கண்டுபிடித்த இன்ஜினை குறைந்த செலவில் கண்டுபிடித்து சாத்தியமாகி சாதனை படைத்திருக்கின்றார். இஸ்ரோவின் இயக்குனராக வேண்டிய நிலையில் திடீரென காவல்துறையால் அவர் கைது செய்யப்படுகின்றார். அதன் பின்பு என்ன நடக்கின்றது என்பதே ராக்கெட்ரி திரைப்படத்தின் கதையாகும். இயக்குனர், நடிகர் என தனது முழு உழைப்பையும் படத்திற்காக கொடுத்திருக்கிறார் மாதவன்.
@ActorMadhavan #Rocketry pic.twitter.com/bmQpoY7fsR
— Rajinikanth (@rajinikanth) July 4, 2022
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இத்திரைப்படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ராக்கெட்ரி திரைப்படம்-அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும், குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் திரு. நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும் என கூறியுள்ளார்.