மை டியர் பூதம் என்ற படத்தில் பிரபுதேவா பூதமாக மாறிய வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது. காமெடி மற்றும் மாயாஜால கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த பணத்தை மஞ்சப்பை படத்தை இயக்கிய என் ராகவன் இயக்கியுள்ளார். அபிஷேக் பிலிம் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ளார். இந்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 15ஆம் தேதி ரெட் ஜெயின்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபுதேவா பூதமாக உருவானது என்பது குறித்து வீடியோ ஒன்றை பல குழு வெளியிட்டுள்ளது. அதில் குழந்தைகளுக்காக பூதம் போன்று அழகான மேக்கப் போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.