கோவையில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் உமேந்தர் (34). இவர், விடுமுறைக்கு சென்னை வந்தார். சம்பவத்தன்று கேளம்பாக்கம், ஓ.எம்.ஆர் மெரினா மாலில், குடும்பத்தோடு படம் பார்த்து விட்டு, கூடுவாஞ்சேரிக்கு செல்வதற்கு, ஓலா கார் புக்கிங் செய்துள்ளார். அந்த காரை ஆத்தூரைச் சேர்ந்த ரவி (41) என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆனால் உமேந்தர் கார் சிறியதாக இருந்ததால் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு போதுமானதாக இல்லை.
எனவே இதில் எப்படி செல்ல முடியும் என்று ஓட்டுநர் ரவியிடம் கேட்டுள்ளார். இது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆகி உள்ளது. அப்போது ரவி கையில் வைத்திருந்த செல்போனால் உமெந்தர் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் உமேந்தர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இந்த தகவல் குறித்து வந்த போலீசார் ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒலா கார் புக்கிங் செய்த கஸ்டமரை டிரைவர் அடித்துக் கொன்ற சம்பவம் கேளம்பாக்க பகுதியில் பெரும்ப பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.