அமெரிக்காவில் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கான அதிக அளவு தேவை,மோசமான வானிலை மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் நாடு முழுவதும் உள்ள பயணிகள் பல்வேறு சிக்கல்களை கடந்து சில நாட்களாக எதிர்கொண்டு வருகிறார்கள். அதன்படி அமெரிக்காவில் கடந்த ஜூலை இரண்டாம் தேதி கிட்டத்தட்ட 650 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு 5200 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தாமதமானதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் தற்போது தொடங்கி இருக்கும் விடுமுறை பயணங்களை முன்னிட்டு வழக்கமான பயணத்தை விட அதிக அளவு தேவை இருப்பதால் அடுத்து வரக்கூடிய நாட்களில் இது போன்ற சிக்கல்கள் எழும். வழக்கத்தைவிட ஜூலை நான்காம் வார இறுதியில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நிலவிய கொரோனா தாக்கத்தின் நிமித்தமே இதே விடுமுறை நாட்களின் பயணத் தேவை இந்த ஆண்டை விட குறைவாக காணப்பட்டது.அதிலும் குறிப்பாக இந்த பயண சிக்கல்களால் அமெரிக்காவில் உள்ள மூன்று விமான நிலையங்கள், விமானங்களின் ரத்து மற்றும் தாமதங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.