Categories
உலக செய்திகள்

“இங்கு தாக்குதலை தீவிரப்படுத்துங்கள்”…. ரஷ்ய அதிபர் போட்ட உத்தரவு…..!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 132-வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதற்கிடையில் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனிடையே லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டிலிருந்த லிசிசண்ஸ்க் நகரையும் ரஷ்யாவானது கைப்பற்றிவிட்டது.

இந்த நிலையில் டான்பாஸ் மாகாணத்தில் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என படையினருக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் டோனெட்ஸ்க் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்தவும் படையினருக்கு ரஷ்யா உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் உக்ரைன் – ரஷ்ய படையினருக்கு இடையில் கடும் மோதல் நிலவி வருகிறது.

Categories

Tech |