மலையாள சினிமாவில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘லூசிபர்’. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். மோகன் ராஜ் ‘லூசிபர்’ தெலுங்கு ரீமேக் இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கிறார்.
இப்படத்தை சூப்பர் ஹிட் ஃபிலிம்ஸ் மற்றும் எண்.வி.ஆர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த வருடம் நடிகர் சிரஞ்சீவி பிறந்த நாளை முன்னிட்டு இருந்த படத்தின் ‘காட்ஃபாதர்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘காட்ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.