Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விருத்தாசலம்: துணை தாசில்தார் உட்பட 7 பேரின் அலட்சியம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

கடலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுதகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக 2-வது மேல் முறையீட்டு மனுக்கள் குறித்து மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்கள் மத்தியில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல் அளிப்பதை எதிரிபோல் பார்க்க கூடாது. இந்த சட்டம் 10 ரூபாயில் தகவலறியும் உரிமையை பொதுமக்களுக்கு அளிக்கிறது.

இதனிடையில் மனுதாரர்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரியதகவல்களை தெரிவிக்க வேண்டியது நம் கடமை. இப்போது தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பாக அனைத்து தகவல் ஆணையர்களும் பல மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் மனுதாரர்கள், பொது தகவல் அலுவலர்கள் பல மாவட்டங்களிலிருந்து சென்னை வருவதற்கு சிரமமாக உள்ளதால், அதனை களையும் விதமாக மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்படுகிறது. இதன் காரணமாக உடனே நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் 40 வழக்குகளுக்கு 2வது மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இவற்றில் பட்டா மாற்றம் குறித்து உரியபதில் அளிக்காத விருத்தாசலம் துணை தாசில்தாருக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல தகவல்களை அளிக்காத வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை பொது தகவல் அலுவலர்கள் 6 பேருக்கு தினசரி ரூபாய் 250 வீதம் அவர்கள் தகவல் அளிக்கும் காலம் வரைக்கும் அபராதம் வசூலித்து நடவடிக்கை மேற்கொண்டுளேன்.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பான மனுக்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தகவலறியும் உரிமை சட்டத்தில் 28 பிரிவுகள் உள்ளது. அந்த பிரிவுகளிலுள்ள முக்கிய பிரிவுகளை தெரிந்துகொண்டு அணுகினால் அதற்கேற்றவாறு பதில்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே தகவல் ஆணையத்தின் சட்டங்களை முழுமையாக தெரிந்துகொண்டு பயனடைய வேண்டும்” என்று அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று இச்சட்டத்தை அலுவலர்கள் தெரிந்து, அதற்கேற்ப மனுதாரர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |