Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்பனை பண்றாங்களா…. உடனே இந்த நம்பருக்கு புகார் கொடுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பால சுப்பிரமணியம் பங்கேற்று, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட மெல்லும் புகையிலை, குட்கா, பான்மசாலா ஆகிய பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குவதால் அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மற்றும் விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

அத்துடன் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அபராதம், சிறைதண்டனை மற்றும் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்தநிலையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் இடங்களை, நிறுவனங்களை, கடைகளை, நபர்களை கண்டறிந்தால் உடனடியாக பொதுமக்கள் உணவு பாதுகாப்புதுறையின் 94440 42322 எனும் வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |