Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றில் முறிந்து விழுந்த பனைமரம்…. குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பலத்த சூறைக்காற்று வீசியதில் பனைமரம் முறிந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.வி.கே.நகர் பகுதியில் இசக்கியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1 1\4 வயதில் முத்து பவானி என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை முத்து பாவனி இரவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீசிய சூறைக் காற்றினால் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த உயரமான பனை மரம் ஒன்று சாய்ந்து ஆடிக்கொண்டிருந்தது. இதனையடுத்து தாக்குப்பிடிக்க முடியாமல் பனைமரம் பாதியில் முறிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த குழந்தை முத்து பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

Categories

Tech |