Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போதை காளான் விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக போதை காளான் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மன்னவனூர் கைகாட்டி பகுதியில் கொடைக்கானல் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் காளான்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் கிருஷ்ணன் மீது ஏற்கனவே கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் கூறியதாவது, சட்டவிரோதமாக போதை காளான் வாங்கி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Categories

Tech |