உஷ்ணம் குறைக்கும்: வெந்தய கலந்த மோர் பானம்:
தேவையான பொருட்கள்:
வெந்தயம் – 1 கப்
மிளகு -1/4கப்
சுக்கு -சிறு துண்டு
மோர் – 1 கப்
செய்முறை:
• வெந்தயம், மிளகு, சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
• ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.
• கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.