ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA _க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை முதலமைச்சராக இருக்க கூடிய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அந்த 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் அமமுக_வினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தாலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வு பெற்று விட்டதால் இந்த வழக்கு மீண்டும் விசாரணை நடைபெறாமல் கிடப்பில் கிடந்தது. இதையடுத்து கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ பி எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ க்கள் விவகாரத்தில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது ஏன்.? இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் ஆணையத்தில் உள்ள வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்க கூடியதா..? மூன்று ஆண்டு கால தாமதம் தேவையற்றது. தமிழக அரசு இதற்க்கு என்ன செய்ய போகிறது. என்று பல அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பி உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.