Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தகவல் அளித்தும் ஏன் வரவில்லை?…. வாகன மோதி “படுகாயம் அடைந்த குதிரை” … பொதுமக்கள் அளித்த தகவல்….!!!!

அடையாளம் தெரியாத வாகனம்  மோதி குதிரை படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் ஆண் குதிரை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அப்போது அவழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குதிரையின் மீது மோதியுள்ளது. இதில்  படுகாயம் அடைந்த குதிரை  வலியில் துடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக விலங்குகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் வரவில்லை. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கால்நடை மருத்துவரை அழைத்து வந்து குதிரைக்கு ஊசி மற்றும் குளுக்கோஸ் செலுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு  ராஜபாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த குதிரையை  வாகன மூலம் விலங்குகள் மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது. குதிரைக்கு சிகிச்சை அளிக்குமாறு தகவல் கொடுத்தும் மாநகராட்சி, விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தினர் இதுவரை வரவில்லை.  மேலும் கால்நடைகளை சாலையில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |