Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண் நோயாளி…. தூய்மை பணியாளர் செய்த வேலை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பகுதியில் 49 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண் கடந்த மாதம் 27-ந்தேதி சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து கடந்த 30-ந்தேதி அறுவை சிகிச்சை முடிந்து இரவு படுக்கையில் இருந்த பெண்ணிடம், தூய்மை பணியாளர் பழனி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன்பின் அந்த பெண் நர்சுகளின் உதவியுடன் இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை வளாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல்துறையினர் தலைமறைவாக இருந்து வந்த பழனியை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |