Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென அகற்றப்பட்ட ஜெயலலிதாவின் சிலை…. போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

அனுமதி இன்றி வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர்களின் சிலை அகற்றப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொழுவந்தாங்கல் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.  சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில்  தி.மு.க.வி.னர் கடந்த 2  மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி சிலையை அதே பகுதியில் வைத்தனர். இதனையடுத்து அ.தி.மு.க.வினர் மீண்டும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை எம்.ஜி.ஆர். சிலை அருகே வைத்தனர்.

இதனை அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனால் 2  கட்சினரும் சிலைகளை அகற்றவில்லை. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் பாண்டியன், வருவாய் ஆய்வாளர் இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர்கள் தீபா, ஆனந்த், ராஜா, துணை போலிஸ்  சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, பாலகிருஷ்ணன், சூர்யா உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுமதியின்றி வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றினர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அ.தி.மு.க.வினர்   முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் சிலையையும்  அகற்ற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அகற்றுயுள்ளனர். அதன் பின்னர் அ.தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |