Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு சிலிண்டர் மானியம் வரலையா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் சூழ்நிலையில் மானியம் வழங்கப்படுவது மக்கள் மத்தியில் சற்று ஆறுதலாக உள்ளது. இருந்தாலும் சிலிண்டர் மானிய தொகை வரவில்லை என்றே சில வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். முதலில் ஒருவர் சிலிண்டர் வாங்கும் போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுக்க வேண்டும்.அதன் பிறகு அதற்கான மானிய தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படுகின்றது.

அதாவது முதன் முதலாக சிலிண்டர் இணைப்பு வாங்கும்போது ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மானியம் பெற முடியாது. அதனைப் போலவே சிலிண்டர் இணைப்புடன் ஆதார் கார்டை கட்டாயம் இணைத்து இருக்க வேண்டும்.அது மட்டுமல்லாமல் சிலிண்டர் மானியத்தை பயனாளியின் வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்துவதால் கள்ளச் சந்தையில் அரசின் மானிய விலை கேஸ் சிலிண்டர் விற்கப்படுவது போன்ற மோசடிகள் தற்போது குறைந்துள்ளது.ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது அதற்கு அரசு வழங்கும் மானிய தொகை வாடிக்கையாளர்களுக்கு வந்து சேருகிறதா இல்லையா என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது.

அதை கண்டுபிடிக்க மிகவும் எளிமையான வழி உள்ளது. சிலிண்டர் மானியம் வருவதை ஆன்லைன் மூலமாகவே நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். சிலிண்டர் மானிய தொகை எந்த கணக்கில் இருந்து மாற்றப்படுகிறது என்பதையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். சிலிண்டர் மானியம் குறித்து சரி பார்ப்பதற்கு MyIpg.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று, முகப்பு பக்கத்தில் இன்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இடம்பெற்று இருக்கும்.

அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயரை தேர்ந்தெடுத்த உடன் புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் உள்ள பார் மெனுவுக்கு சென்று “give your feedback online” என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு வாடிக்கையாளரின் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர் மற்றும் விநியோகஸ்தர் போன்ற விவரங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். அதன் பிறகு feedback type என்பதை கிளிக் செய்து, complaint என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்த நெக்ஸ்ட் என்பதை கொடுக்க வேண்டும்.

உங்கள் வங்கி விவரங்கள் புதிய துணை பக்கத்தில் அதில் வெளியாகும். சிலிண்டர் மானிய தொகை வங்கிக் கணக்கில் வந்துள்ளதா இல்லையா என்பதை அதில் நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு மானியத் தொகை கிடைக்காவிட்டால் 18002333555 என்ற டோல் ஃப்ரீ நம்பருக்கு அழைத்து புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |