அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளனர் . ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்று இதனை நாளை அவசர வழக்காக நீதிமன்றம் விசாரிக்கிறது. பொதுக்குழு நடக்கும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே அழைப்பிதழ் வழங்க வேண்டும் என்ற நிலையில், தங்களுக்கு மாலை தான் பொதுக்குழுவுக்கான அழைப்புதல் அனுப்பப்பட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பினர் தங்கள் மனுவில் கூறியுள்ளனர். இதனால் நாளை அவசர வழக்காக நீதிமன்றம் இதனை விசாரிக்க உள்ளது.
இந்நிலையில் அதிமுக செயல்பாட்டிற்கு ஓபிஎஸ் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த ஓபிஎஸ் ஒத்துழைக்கவில்லை. அது மட்டும் இன்றி கட்சி நிதியை ஓபிஎஸ் விடுவிக்காததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.தொண்டர்கள் இடையே செல்வாக்கை இழந்ததால் இணைந்து செயல்பட ஓபிஎஸ் மருத்துவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது அதிமுகவில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.