Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இடைத்தேர்தல்…. அரசாங்கத்தை குற்றம் சாட்டிய இம்ரான் கான்…. பதிலடி கொடுத்த ஆளுங்கட்சி….!!!

பாகிஸ்தானில் பஞ்சாப் சட்டசபையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் இடை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் அடிக்கடி தற்போதைய அரசாங்கத்தை வெளிநாட்டினரால் இறக்குமதி செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டி வருகிறார். மேலும் அமெரிக்கா இந்த அரசாங்கத்தை சதி வேலைகளால் திணித்ததாகவும் குற்றம் சாட்டுகிறார். இதற்கு பதிலளிக்க கூடிய பேசிய மரிய நவாஸ், இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தை புறக்கணித்தார். இம்ரான் கானின் மனைவி பூஷ்ரா பீபி மற்றும் அவரது கும்பலா ஆட்சி, பஞ்சாப் மாகாணத்தின் வளங்களை கொள்ளை அடித்தது.

அதனை தொடர்ந்து இம்ரான் கான் கட்சியான பிடிஐ ஆட்சிக்காலத்தில் பஞ்சபாதை அனாதை போல் இருந்தது. ஆனால் இப்போது சிங்கம் பிரதமராக மீண்டும் வந்துவிட்டது. ஆகவே பஞ்சாப் முன்பு போல் முன்னேறும்.  பாகிஸ்தானில் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல்கள் பிடிஐ ஆட்சியின் போது நடந்தது. துரதிஷ்டவசமாக, பாகிஸ்தானிய அரசியலில் மிகப்பெரிய பொய்யர், குழப்பவாதி மற்றும் ஏமாற்றுக்காரர் ஒருவர் பிரதமரானார். அந்நாட்டு மக்களை அமெரிக்கா அடிமைகளாக வைத்திருக்கிறது என்று அவர் மக்களிடம் அடிக்கடி பொய் கூறுவார். இப்படி அவர் தனது சதி வார்த்தைகளில் மக்களை பிஸியாக வைத்திருந்தார். மேலும் வெளிநாட்டு சதியால் தன்னுடைய அரசாங்கம் கவிழ்ந்தது என்று இம்ரான் கூறி வருவது பாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய நாடகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |