Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களின் வீடு இடிப்பு?…. ஒரு மாதத்திற்குள் காலி பண்ணுங்க…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசியல் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு சார்பாக குடியிருப்புகள் வழங்கப்படுகின்றது. அவ்வகையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் அரசு ஊழியர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தர மற்ற நிலையில் மோசமாக உள்ளன. அந்த வீடுகளில் சிமெண்ட் பூச்சிகள் அனைத்தும் உதிர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அரசுஊழியர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்று தமிழக முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்புகளை புணரமைப்பு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள் 1200 கோடி செலவில் மறு கட்டுமானம் செய்யப்பட்டது. இதனிடையே மதுரையில் உள்ள சொக்கிகுளம், ரேஸ் கோர்ஸ் காலனி,யாரோ காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் 40 ஆண்டுகளுக்கும் பழமையானவை. இதனால் இந்த குடியிருப்புகளில் வசிப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் குடியிருப்புகளை இடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 1 32 அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகளில் உள்ள வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அந்த குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஒரு மாதத்திற்குள் காலி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் திடீர் உத்தரவால் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் ஆணி மற்றும் ஆடி மாதங்களில் பொதுவாக எந்த வீடுகளும் காலியாவதில்லை. அதேசமயம் அவர்களின் குழந்தைகளையும் அருகில் உள்ள பள்ளிகளில் தான் சேர்த்து உள்ளார்கள்.இதனால் ஒரு மாத காலத்திற்குள் வீட்டை காலி செய்வது என்பது முடியாத காரியமாகும் என்றும் இந்த வீட்டிற்கு பதிலாக வேறொரு வீட்டை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் ஊழியர்கள் அனைவரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |