உலகம் முழுவதும் இன்றைய காலகட்டத்தில் அனைவரின் கைகளில் செல்போன் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியோர்களே அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இது மனிதர்களின் அத்தியாவசிய தேவை போல வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டது. ஷாப்பிங் செய்வது முதல் பணம் அனுப்புதல், கேமிங் என அனைத்திற்கும் இந்த மொபைல் போன் பயன்படுத்தப்படுகிறது. பொது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் செல்போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
அனைவரும் மடிக்கணக்கில் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில நிமிடங்கள் உங்கள் கையில் செல்போன் இல்லாவிட்டால் ஒரு பெரிய பிரச்சனை இருப்பது போல உணர்வு ஏற்படுகிறது. ஆனால் செல்போனை கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பர் எவ்வளவு நேரம் அந்த செல்போனை பயன்படுத்துகிறார் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?, இவர் ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,தினந்தோறும் எவ்வளவு நேரம் ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது 24 மணி நேரத்தில் 5% இழுக்காட்டிற்கும் குறைவான நேரம்தான் ஸ்மார்ட் ஃபோனுக்கு ஒதுக்குவதாக கூறியுள்ளார். அவர் முன்னணி ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளனி ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார் என்பதை அறிந்து மார்ட்டின் கூப்பர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு பயனாளர்களுக்கு நேர்காணல் மூலம் அவர் ஆலோசனை வழங்கினார். அதன்படி போன் பயன்பாட்டை குறைத்து மெய்நிகர் வாழ்க்கையை விட்டுவிட்டு நிஜ வாழ்க்கையை மக்கள் அனைவரும் வாழ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரின் கூற்றுப்படி ஸ்மார்ட்போன் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. ஏனென்றால் போலி உலகை தவிர்த்து வெளியே வந்தால் நிறைய உண்மையான செயல்களை மக்கள் அனுபவித்து வாழ முடியும் என்பது அவரது எண்ணம். ஆய்வாளர்களின் கணக்கீடுகளின் படி இவர் கூறுவது தான் உண்மை எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் செல்போனை 1973 ஆம் ஆண்டு மார்ட்டின் கூப்பர் கண்டுபிடித்தார். இந்த செல்போனை உருவாக்க அவருக்கு மூன்று மாதங்கள் மட்டுமே ஆனது.