Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் ரூபாய் அள்ளலாம்….. இதோ சூப்பரான திட்டம் உங்களுக்காக….!!!!

மாதம் 3500 முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய் வரை பணம் கிடைக்கும் இந்த திட்டத்தை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

அனைவருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது ஆசை. அது சுலபமான விஷயம் அல்ல.  வாங்கும் சம்பளத்தில் அனைத்தையும் செலவு செய்து விடாமல் எதிர்காலத்திற்காக சிறிது தொகையை சேமித்து வைப்பது மிகவும் நல்லது. அந்த சேமிப்பு மொத்தமாகவோ அல்லது ஒவ்வொரு மாதம் செய்யக்கூடிய சேமிப்பாக இருந்தால் அதைவிட சிறப்பு. வங்கிகளில் இப்போது சராசரியாக 5 சதவீத வட்டி மட்டுமே கிடைக்கின்றது. இது போன்ற சூழலில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

எஸ்ஐபி முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். தற்போதைய சூழலில் எஸ்ஐபி முதலீட்டில் 12 சதவீத லாபத்தை எதிர்பார்க்க முடியும். வங்கிகளில் முதலீடு செய்வதாக இருந்தால் மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானம் மீட்டுவதற்கு மொத்தம் 1.2 கோடி வரையில் டெபாசிட் செய்ய வேண்டும். ஆனால் எஸ்ஐபி முதலீட்டில் 3500 மாதம் செலுத்தினால் போதும் உங்களுக்கு தற்போது 30 வயது வைத்துக் கொண்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீங்கள் மாதத்துக்கு 3500 என்ற விகிதத்தில் முதலீடு செய்தால் 12 சதவீத வட்டியில் உங்களுடைய 60-வது வயதில் மாதத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிக லாபம் கிடைத்தாலும் அவை சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. எனவே அவற்றில் முதலீடு செய்யும்போது சந்தை வல்லுநர்களின் ஆலோசனை பெயரில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.

Categories

Tech |