தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தகுதி தேர்வுகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. இதன் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து. இதனையடுத்து 13,300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை தாள் ஒன்றுக்கு மட்டுமே தேர்வு நடத்த உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்வு கால அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.