கிணற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தட்டபாறை கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கட்டிட மேஸ்திரியான சந்தோஷ்குமார் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சந்தோஷ்குமாரின் சடலத்தை மீட்டனர். பின்ன சந்தோஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.