காலி நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்த நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துறையூர் செல்லும் சாலையில் கொசவம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறை நடத்திய வருகின்ற நிலையில் பழைய சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் இரவு வழக்கம் போல் பணி முடித்துவிட்டு பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் அதிகாலை 2 மணி அளவில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.
ஆனால் வாகனங்கள் தீக்கிரையானது. இதனால் சுரேஷ், சம்பூரணம் உள்ளிட்டோர் நாமக்கல் போலீசில் புகார் தெரிவித்தனர். அதில் அவர்கள் கூறியதாவது, 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்திருப்பதாகவும் அவற்றின் மதிப்பு 17 1/2 லட்சம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் மர்ம நபர்கள் தொழில் போட்டி காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு சென்றதாக கூறப்படுகின்றதால் போலீசார் சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்து வருகின்றனர்.