இன்றைய தின நிகழ்வுகள்
1189 – முதலாம் ரிச்சார்டு இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1348 – கறுப்புச் சாவுக்குக் காரணமான யூதர்களைப் பாதுகாப்பதற்கான ஆணை ஓலையையை திருத்தந்தை ஆறாம் கிளெமெண்டு வெளியிட்டார்.
1411 – தனது மூன்றாவது செல்வம் தேடும் பயணத்தை முடித்துக் கொண்டு நாஞ்சிங் திரும்பிய மிங் சீனத் தளபதி செங் ஹே, தனது பயணத்தின் போது இலங்கையில் மிங்-கோட்டைப் போரில் கைது செய்த இலங்கை மன்னன் அழகக்கோனை யொங்கில் பேரரசரிடம் ஒப்படைத்தார்.
1483 – மூன்றாம் ரிச்சார்டு இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
1484 – போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்டார்.
1535 – சேர் தாமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரினால் தூக்கிலிடப்பட்டார்.
1557 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கணவர் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னர் பிரான்சுடன் போர் புரிவதற்காக டோவர் துறையில் இருந்து புறப்பட்டார். மேரி தனது கணவரைப் பின்னர் பார்க்கவில்லை.
1630 – முப்பதாண்டுப் போர்: நான்காயிரம் சுவீடன் படைகள் குசுதாவசு அடால்பசு தலைமையில் செருமனியின் பொமிரானியா நகரை அடைந்தன.
1854 – ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது.
1885 – பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்ச்சர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை வெறிநாய்க்கடியினல் நோய் வாய்ப்பட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.
1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1917 – முதலாம் உலகப் போர்: அரபுக் கிளர்ச்சியின் போது அராபியப் படைகள் லாரன்சு தலைமையில் அக்காபாவை உதுமானியரிடம் இருந்து கைப்பற்றினர்.
1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.
1939 – நாட்சி ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.
1941 – செருமானிய இராணுவம் சிமோலியென்சுக்கின் அருகில் சோவியத் இராணுவத்தினரை சிற்றி வளைத்தன.
1944 – அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் கழைக்கூத்து அரங்கில் இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் உயிரிழந்தனர், 700 பேர் வரை காயமடைந்தனர்..
1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளைத் தயாரிக்க ஆரம்பித்தது.
1956 – சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.
1962 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.
1964 – மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1966 – மலாவி குடியரசாகியது. ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா அதன் முதல் அரசுத்தலைவரானார்.
1967 – நைசீரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1975 – கொமொரோசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1988 – வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 167 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1989 – டெல் அவீவ்–எருசலேம் பேருந்து ஒன்றைக் கைப்பற்றிய பாலத்தீன இசுலாமிய ஜிகாத் உறுப்பினர் ஒருவர் அதனை குன்று ஒன்றின் மீது மோத வைத்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நாதூ லா கணவாய் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
2013 – நைஜீரியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
2013 – போயிங் 777 விமானம் சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், 181 பேர் காயமடைந்தனர்.
2013 – கனடாவின் கியூபெக்கில் எண்ணெய்த் தொடருந்து ஒன்று தடம் புரண்டு வெடித்ததில் 47 பேர் உயிரிழந்தனர், நகரின் மத்திய பகுதியில் 30 கட்டடங்கள் சேதமடைந்தன.
இன்றைய தின பிறப்புகள்
1832 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிக்கோ பேரரசர் (இ. 1867)
1837 – ராம்கிருட்டிண கோபால் பண்டார்கர், இந்தியக் கீழ்த்திசை மொழிப்புலமையாளர் (இ. 1925)
1870 – பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903)
1901 – சியாமா பிரசாத் முகர்ஜி, மேற்கு வங்க அரசியல்வாதி (இ. 1953)
1907 – பிரிடா காலோ, மெக்சிக்கோ ஓவியர், கல்வியியலாளர் (இ. 1954)
1914 – எர்னஸ்ட் கர்கென்டல், அமெரிக்க வேதியியலாளர், உலோகவியலாளர் (இ.2005)
1921 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணி (இ. 2016)
1930 – எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர் (இ. 2016)
1932 – பூ. கணேசலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1935 – டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)
1935 – ஆர். சண்முகம் மலேசிய எழுத்தாளர்
1937 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் 5வது சனாதிபதி (இ. 2014)
1940 – நுர்சுல்தான் நசர்பாயெவ், கசக்ஸ்தானின் 1வது சனாதிபதி
1946 – ஜார்ஜ் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 43வது அரசுத்தலைவர்
1946 – சில்வெஸ்டர் ஸ்டாலோன், அமெரிக்க நடிகர்
1975 – 50 சென்ட், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்
1979 – கெவின் ஹார்ட், அமெரிக்க நடிகர்
1980 – இவா கிரீன், பிரெஞ்சு நடிகை
1981 – நிகிதா துக்ரல், இந்திய நடிகை
1985 – ரன்வீர் சிங், இந்திய நடிகர்
இன்றைய தின இறப்புகள்
1535 – தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1478)
1553 – ஆறாம் எட்வர்டு, இங்கிலாந்து, அயர்லாந்து மன்னர் (பி. 1537)
1614 – மான் சிங், ராஜ்புத் அரசர் (பி. 1550)
1827 – தோமஸ் முன்ரோ, சென்னை மாகான ஆளுநர் (பி. 1761)
1854 – ஜார்ஜ் ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1789)
1893 – மாப்பசான், பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1850)
1902 – மரியா கொரெற்றி, இத்தாலியப் புனிதர் (பி. 1890)
1962 – வில்லியம் பால்க்னர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1897)
1968 – மயிலை சிவ முத்துக்குமாரசுவாமி, தமிழறிஞர், தமிழாசிரியர் (பி. 1892)
1971 – லூயிசு ஆம்சுட்ராங், அமெரிக்கப் பாடகர் (பி. 1901)
1985 – மௌனி, தமிழக எழுத்தாளர் (பி. 1907)
1986 – ஜெகசீவன்ராம், இந்திய அரசியல்வாதி (பி. 1908)
2002 – திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1932)
2005 – கிளாட் சிமோன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1913)
2011 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1932)
இன்றைய தின சிறப்பு நாள்
விடுதலை நாள் (மலாவி, பிரித்தானியாவிடம் இருந்து 1964)
ஆசிரியர் நாள் (பெரு)