Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதியதில் காசாளர் உயிரிழப்பு”…. பஸ் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை….!!!!!

ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதியதில் காசாளர் பலியாகி உள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த நூருதீன்(60) என்பவர் ஊட்டி பஸ் நிலையம் அருகே இருக்கும் தனது தம்பி காஜா என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடையில் காசாளராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணி அளவில் பணி முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற பொழுது ரவுண்டானா பகுதி பெங்களூருக்கு செல்லும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பொதுமக்கள் போலீசருக்கு தகவல் கொடுத்ததைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |