தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி செங்கல்பட்டு,மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
இதில் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனித வள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வை நடத்தி தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம். இவர்களை தவிர நர்சுகள், மருந்தாளர்நர், ஆய்வக உதவியாளர்கள், தட்டச்சர், சுருக்கு எடுத்தர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற அனைவரும் பங்கேற்கலாம்.
18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மூன்று மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் வருகின்ற ஜூலை 8-ம் தேதி வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.