Categories
அரசியல் கடலூர் திருவாரூர் மாவட்ட செய்திகள்

கையெழுத்து இயக்கம் நடத்தினால் வழக்கு….

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியவர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

கடலூர்  தலைமை தபால் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. இதில் கலந்து கொண்டதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எம் ஆர் பன்னீர்செல்வம் உட்பட  300 பேர் மீது கடலூர் புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுபோல திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தியவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜனநாயக முறையில் எதிர்ப்பை பதிவு செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் காவல்துறை உரிய நடவடிக்கைக்கு  பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளன.ர் இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |