தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தகுதியான பேராசிரியர்கள் மற்றும் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து இரண்டு வாரங்களுக்குள் கல்லூரிகள் விளக்கம் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி ஆகியவை வழங்கப்பட மாட்டாது என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
இதற்கு முன்னதாக 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த அண்ணா பல்கலைக்கழகம் 225 கல்லூரிகளில் உரிய உள்கட்டமைப்பு வசதிகள், தகுதியான பேராசிரியர்கள் மற்றும் உரிய கட்டமைப்பு இல்லாததை கண்டறிந்த நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு வாரத்திற்குள் அனைத்து கல்லூரிகளும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.