தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டெட் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நடப்பு ஆண்டில் இந்த தேர்வுகளை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் சுமார் 6.3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த மாதம் இறுதியில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. என் நிலையில் கடந்த மாதத்துடன் முடிவடைந்த TETதேர்வுக்கான விண்ணப்ப பதிவில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் வருகின்ற ஜூலை 11 முதல் 16 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது