சென்னையைச் சேர்ந்தவர் தினகரன் இவர் சென்னையில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு ஏராளமான நபர்கள் டீ குடிக்க வருவது வழக்கம். எனவே வாடிக்கையாளர்களை கவர ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று யோசித்தார் தினகரன். பெரும்பாலும் டீக்கடைகளில் கண்ணாடி டம்ளர்களில் தான் டீ கொடுக்கப்படும்.
ஆனால் இவர் அதை மாற்றி யோசித்து கண்ணடியுடன் ஒப்பிடுகையில் சிரட்டை தான் இயற்கையானது என்பதனால் சிரட்டையை டீ கப்பாக பயன்படுத்துகிறார். இது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.