விமானம் தாமதமானதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்
ஜெர்மன் நாட்டில் உள்ள பிராங்பர்ட் நகரில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் 292 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்னையை நோக்கி கிளம்பியது. இது இரவு 11.50 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடையும். ஆனால் திடீரென சென்னைக்கு வரவேண்டிய விமானம் துருக்கியில் தரை இறங்கியுள்ளது. அங்கிருந்து மீண்டும் கிளம்பிய விமானம் அதிகாலை 2:55 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானம் மீண்டும் ப்ராங்பர்ட் நகருக்கு வழக்கமாக 1:50 மணிக்கு புறப்படும். ஆனால் விமானம் வர தாமதமானதால் நேற்று அதிகாலை 5:45 மணிக்கு பிராங்பர்ட் நகருக்கு புறப்பட்டது. இதில் 308 பயணிகள் சென்றனர். இந்த விமானம் வருவதற்கு 3 மணி நேரம் தாமதமானதால் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் துருக்கியில் விமானம் தரையிறங்கியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.